முஸ்லீம்களின் உடல்கள் தொடர்பாக ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவில் மேலும் உறுப்பினர்களை இணைத்து கொள்ள முடிவு- அசேல குணவர்த்தன

கொரோனா வைரசினால் உயிரிழந்த முஸ்லீம்களின் உடல்கள் தொடர்பாக ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவில் மேலும் பலரை இணைத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட குழுவில் மேலும் முஸ்லீம்களையும் தொற்றுநோய் நிபுணர்களையும் இணைத்துக்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரசினால் உயிரிழந்த முஸ்லீம்களின் உடல்கள் தொடர்பாக ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழு மேலும் சமநிலை தன்மை மிக்கதாக காணப்படுவதாக மேலும் பலரை உள்வாங்கவேண்டும் என்ற வேண்டுகோள் விடுக்கப்பட்டது என அவர் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ள அவர் எனினும் புதிய குழுவில் இடம்பெறவுள்ளவர்களின் விபரங்களை வெளியிடவில்லை.
குறிப்பிட்ட குழுவில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்கள் குறித்து ஏற்கனவே சமூக ஊடகங்களில் கேள்விகள் வெளியாவது குறிப்பிடத்தக்கது.

Be the first to comment

Leave a Reply