கொரோனா தடுப்பூசியை ஏற்றிய சிறிது நேரத்தில் தாதி மயங்கி வீழ்ந்ததால் பரபரப்பு

கொரோனா தடுப்பூசியை ஏற்றிக் கொண்ட தாதியர் ஒருவர் திடீரென ஒருவர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த பைசர் ஜெர்மனியின் பயோன்டெக், மொடேர்னா ஆகிய இரு நிறுவனங்களும் உருவாக்கிய தடுப்பூசிகளை அவசர தேவைக்கு பயன்படுத்த அமெரிக்கா அனுமதி அளித்துள்ளது.

உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பில் முதலிடத்தில் இருந்து வரும் அமெரிக்காவில் சுகாதாரப் பணியாளர்கள் மூத்த குடிமக்களுக்கு முன்னுரிமை கொடுத்து முதலில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

அந்த வகையில், டிஃபானி டோவர் எனும் 30 வயதான தலைமை தாதி முதலாவதாக கொரோனா தடுப்பூசியை ஏற்றிக் கொண்டார். அதன் பின்னர், கொரோனா தடுப்பூசியைப் போட்டுக் கொள்ள வேண்டிய அவசியம் குறித்து ஊடகங்களுக்கு அவர் பேட்டியளித்துக் கொண்டிருந்தார். அப்போது, திடீரென அவர் மயங்கி விழுந்தார்.

இதையடுத்து, கொரோனா தடுப்பூசி பாதுகாப்பு தொடர்பான விவாதங்கள் அமெரிக்காவில் விவாதப் பொருளாகி உள்ளது. ஆனால், டிஃபானி டோவருக்கு எப்போது ஊசி போட்டாலும் வலியை தாங்கிக் கொள்ள முடியாமல் அவர் மயங்கி விழுந்து விடுவார் என அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தனர்.

தொடர்ந்து, சிறிது நேரத்தில் மயக்கம் தெளிந்து எழுந்த அவர், வலி உணர்வைத் தாங்க முடியாதபோது தனக்கு எப்போதும் மயக்கம் வருவது உண்டு என்றும், சில நிமிடங்களிலேயே மயக்கம் தெளிந்து விடும் என்றும் சிரித்த முகத்துடன் விளக்கம் அளித்தார். தடுப்பூசி போட்டுக்கொண்டதற்கும் மயக்கம் வந்ததற்கும் தொடர்பில்லை என்று அவர் கூறியதை சுற்றி இருந்தவர்கள் ஒருவித பதற்றதுடனேயே பார்த்தனர்.

Be the first to comment

Leave a Reply