சமுக ஊடகங்கள் பதிவு தொடர்பில் இன்று வெளியான தகவல்

சமுக ஊடக பயனர்களை பதிவு செய்வதற்கான ஒரு முடிவை அரசாங்கம் எடுக்கவில்லை என்றும், சமூக ஊடகங்களை ஒழுங்குபடுத்துவது தொடர்பாக பரப்பப்படும் வெளிவரும் தகவல்கள் பொய்யானவை என்றும் ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர் , சமுக ஊடகங்களை பயன்படுத்துவோரை பதிவு செய்வதற்கு விசேட வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் தனது கருத்துக்களை தெளிவுபடுத்தி இன்று (திங்கட்கிழமை) ஒரு அறிக்கையை வெளியிட்ட அமைச்சர், சமுக ஊடகங்களை பயன்படுத்துவோரை பதிவு செய்வது அரசாங்கத்தின் நோக்கம் இல்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் வெளிநாட்டு டிஜிட்டல் செயற்பாட்டாளர்களை பதிவுசெய்வதையே அரசாங்கம் பரிசீலித்து வருகிறது என்றும் கெஹலிய ரம்புக்வெல குறிப்பிட்டுள்ளார்.

இந்த டிஜிட்டல் பன்னாட்டு கூட்டு நிறுவனங்கள் உள்ளூர் வணிகங்களை பெரிதும் பதிப்பதாகவும் இது நடுத்தர நிறுவனங்களை நேரடியாக பாதிக்கிறது என்றும் சுட்டிக்காட்டினார்.

இலங்கையில் உள்ள முன்னணி தொழில் நிறுவனங்களினால் வழங்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் பரிசீலனைகள் இடம்பெறுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்த வெளிநாட்டு டிஜிட்டல் தளங்கள் மூலம் நாட்டை விட்டு பெரும் தொகை வெளியேறுவதற்கு வழிவகுக்கிறது என்றும் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

சமுக ஊடகங்களை கண்காணிக்கவோ அல்லது கட்டுப்படுத்தவோ நடைமுறையில் சாத்தியமில்லை என்பதால் இதுபோன்ற சமுக ஊடக ஒழுங்குமுறை நடைபெறாது என்றும், அத்தகைய முடிவை எடுக்க வேண்டுமானால், அது தொடர்பான ஆலோசனையைப் பின்பற்றுவதன் மூலம் மட்டுமே செய்ய முடியும் என்றும் மேலும் தெரிவித்துள்ளார்.

Be the first to comment

Leave a Reply