தனிமைப்படுதல் குறித்து இராணுவத் தளபதி தெரிவித்தது

இன்று காலை ஐந்து மணியுடன் தனிமைப்படுத்தப்பட்ட இடங்கள் சில விடுவிக்கப்பட்டிருப்பதுடன், புதிதாக சில இடங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சஷேந்திர சில்வா தெரி வித்துள்ளார்.

அதன்படி, இன்று அதிகாலை 05 மணி முதல் கொழும்பு மாவட்டத்தில் வெல்லம்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சாலமுல்ல கிராம சேவையாளர் பிரிவு, வௌ்ளவத்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோகிலா வீதி என்பன தனி மைப் படுத் தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி  தெரிவித்துள்ளார்.

தனிமைப்படுத்தப்பட்டுள்ளன பேலியகொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கங்கபட கிராம சேவகர் பிரிவின் நெல்லி கஹவத்தை மற்றும் பூரணகொட்டுவத்த மற்றும் கிரிபத் கொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விலேகொட வடக்கு கிராம சேவகர் பிரிவின் ஸ்ரீஜயந்தி மாவத்தை ஆகிய பகுதிகள் இன்று அதிகாலை ஐந்து மணி முதல் தனிமைப் படுத்தப்பட்டுள்ளன.

கொழும்பு மாவட்டத்தில் மோதர, கொட்டாஞ்சேனை, கிராண்ட்பாஸ், ஆட்டுப்பட்டி தெரு, டாம் வீதி , வாழைத் தோட்டம், மாலி காவத்தை, தெமட்ட கொடை மற்றும் மருதானை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தல் தொடரும் என தெரி விக்கப்படுகின்றது.

அதன்படி , கொம்பனி வீதி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகள் வேகந்த கிராம சேவகர் பிரிவு, பொரளை பொ லிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகள் வனாத்தமுல்லை கிராம சேவகர் பிரிவும், வெல்லம்பிட்டி – லக்சந்த செவன வீட்டுத் திட்டம் மற்றும் மட்டக்குளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதி பேர்கசன் பாதை தெற்கு பகுதி மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தல் தொடரும் என தெரிவிக் கப் படுகின்றது.

கொம்பனி வீதி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹுணுப் பிட்டிய கிராம சேவையாளர் பிரிவு, கறுவாத்தோட்டம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 60 ஆம் தோட்டம், வெள்ளத்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மயுரா பகுதி, வெள்ளவத்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நஃபீர்வத்தை மற்றும் மிரி ஹான பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தமிழ்நாடு ஆகிய பகுதி கள் மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தல் தொடரும் என தெரிவிக்கப்படுகின்றது.

கம்பஹா மாவட்டத்தில் வத்தளை பொலிஸ் பிரிவிற்குட் பட்ட கெரவலப்பிட்டிய கிராம சேவகர் பிரிவு நைதுவ பிரதேசம் , பேலியகொடை பொலிஸ் பிரிவிற்குட் பட்ட கங்கபட கிராம சேவகர் பிரிவு, கிரிபத்கொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விலேகொட வடக்கு கிராம சேவகர் பிரிவு என்பன தனிமைப்படுத்தலிலிருந்து இன்று காலை 5 மணிக்கு விடுவிக்கப்பட்டுள்ளன.

வத்தளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெலிகடமுல்ல கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட துவே வத்த பகுதி , பேலிய கொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பேலியாகொடவத்த, மீகஹாவத்த ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் மற்றும் பட்டிய வடக்கு கிராம சேவகர் பிரிவிலுள்ள ரோஹன விஹார மாவத்தை ஆகிய பகுதிகள் மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தல் தொடரும் என தெரிவிக்கப் படுகின்றது.

கிரிபத்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹூணுப்பிட்டி வடக்கு கிராம சேவகர் பிரிவின் வெதிகந்த பகுதி , நீர் கொழும்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தல்துவ கிராம சே வகர் பிரிவின் எம்.சி வீட்டு திட்டம், நிட்டம்புவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திஹாரி வடக்கு மற்றும் கிழக்கு கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட வாரன பன்சல வீதி, கத்தோட வீதி மற்றும் இந்திரா மாவத்தை ஆகிய பகுதிகள் மறு அறிவித் தல் வரை தனிமைப்படுத்தல் தொடரும் என தெரிவிக் கப்படுகின்றது.

வெயாங்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹிரிப் பிட்டிய தெற்கு கிராம சேவகர் பிரிவின் சுதந்திர மாவத் தை, பூகொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குமாரிமுல்ல கிராம சேவகர் பிரிவுகள் ஆகிய பகுதிகள் மறு அறிவித் தல் வரை தனிமைப்படுத்தல் தொடரும் என தெரிவிக் கப்படுகின்றது.

இதற்கமைய இன்று காலை 5 மணி முதல் சில இடங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன பேலியகொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கங்கபட கிராம சேவகர் பிரிவின் நெல்லி கஹவத்தை மற்றும் பூரணகொட்டுவத்த மற்றும் கிரிபத் கொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விலேகொட வடக்கு கிராம சேவகர் பிரிவின் ஸ்ரீஜயந்தி மாவத்தை ஆகிய பகுதிகள் இன்று அதிகாலை ஐந்து மணி முதல் தனிமைப் படுத்தப்பட்டுள்ளன.

நாட்டின் ஏனைய மாவட்டங்களில் தனிமைப் படுத்தப் பட்ட பகுதிகள் மறு அறிவித்தல் வரும் வரை தனிமைப் படுத்தல் தொடரும் என இராணுவ தளபதி மேலும் தெரி வித்தார்.

Be the first to comment

Leave a Reply