கடல் வழியாக தமிழகத்திற்குள் சட்டவிரோதமாக நுழைந்த இலங்கை நபர் கைது

இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்ட போரின்போது தமிழகத்திற்கு அகதியாக வந்து மண்டபம் அகதிகள் முகாமில் தங்கி இருந்த முஜிபூர் ரகுமான்.

கடந்த 2019 டிசம்பர் மாதம் 25ஆம் தேதி கள்ளதோணியில் சட்டவிரோதமாக இலங்கைக்கு தப்பிச் சென்றார். நேற்றிரவு முஜிபூர் ரகுமான் இலங்கை மன்னார் மாவட்டம் பேசாலையில் இருந்து சட்டவிரோதமாக மீண்டும் தனுஷ்கோடி வந்தடைந்தார்.

இவரை கைது செய்த உளவுத்துறை அதிகாரிகள் மண்டபம் முகாமில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Be the first to comment

Leave a Reply