பல்கலைக்கழக மாணவனுக்கு கொவிட்-19 தொற்று

வவுனியா குருமண்காட்டில் 22 வயது பல்கலைக்கழக மாணவனுக்கு நேற்று இரவு  கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டது.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 22 வயதுடைய பல்கலைக்கழக மாணவன் ஒருவர் திங்கட்கிழமை வெளிநாடு செல்லும் நோக்கில் கடந்த வெள்ளிக்கிழமை வவுனியா வருகை தந்து குருமண்காட்டிலிலுள்ள அவரது நண்பர்களுடன் தங்கியிருந்துள்ளார்.

அதன் பின்னர் சனிக்கிழமை மாலை வெளிநாடு செல்வதற்காக கொழும்பிற்குச் சென்றுள்ளார். வெளிநாடு செல்வதற்காக குறித்த மாணவனுக்கு பி.சீ.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன் முடிவுகள் நேற்று (20.12.2020) இரவு 8.20 மணியளவில் வெளியானதில் அவருக்கு கொவிட் -19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதனையடுத்து மாணவன் வவுனியாவில் தங்கியிருந்த அவரின் நண்பர்களின் வீடு சுகாதாரப் பிரிவினரினால் முடக்கப்பட்டுள்ளதுடன் குறித்த பல்லைக்கழக மாணவன் வவுனியாவில் நடமாடிய இடங்கள் தொடர்பிலான விசாரணைகளை சுகாதாரப் பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்.

Be the first to comment

Leave a Reply