LPL தொடரில் சுயநலமில்லாத வீரர்.Underrated Player தனஞ்சய டி சில்வா


LPL தொடரில் சுயநலமில்லாத வீரர்.
Underrated Player தனஞ்சய டி சில்வா.

இலங்கை கிரிக்கெட் வீரர்களில் மனதளவில் மிகவும் உறுதியான வீரர் என மிக்கீ ஆர்தரால் புகழாரம் சூட்டப்பட்ட வீரர். கடந்த வருடத்திற்கான டெஸ்ட் போட்டிகளில் சிறந்த சகலதுறை வீரருக்கான SLC விருதை வென்றவர்.

அணியில் தனக்கு கொடுக்கப்படும் பொறுப்பை முகஞ்சுழிக்காமல் செய்பவர்.
பொதுவாக இலங்கை உள்ளூர் போட்டிகளில் Top Order இல் விளையாடுபவர் ஆனாலும் அணியின் சமநிலையைப் பேணுவதற்காக இழுக்கின்ற பக்கமெல்லாம் இழுபட்டு விளையாடக்கூடியவர். இலங்கை அணிக்காக ஆரம்ப துடுப்பாட்டம் முதல் இலக்கம் 9 வரை விளையாடியிருக்கின்றார். ஆனால் இதுவரை அவருக்கென்று ஒரு குறிப்பிட்ட இடம் இலங்கை அணியில் வழங்கப்படவில்லை.

இலங்கை அணியில் தான் அவருக்கு விருப்பமான இடத்தில் ஆடுவதற்கு வாய்ப்புக் கிடைக்கவில்லை என்று பார்த்தால் LPL போட்டிகளிலும் அவருக்கென்று சரியான இடம் கொடுக்கப்படவில்லை. ஒவ்வொரு போட்டியின் போதும் அவரது அணியில் அவரது பாத்திரம் மாறிக்கொண்டே இருந்த்தை அவதானிக்க முடிந்தது. சத்திர சிகிச்சையொன்று காரணமாக கொரோனா விடுமுறையின் பின்னர் நடைபெற்ற போட்டிகளில் அவர் விளையாடவும் இல்லை. இருப்பினும் LPL போட்டிகளில் அவருக்கு வழங்கப்பட்ட பொறுப்புக்களை முடிந்தளவு துடுப்பாட்டத்திலும் பந்துவீச்சிலும் நிறைவேற்றியிருந்தார்.

முதல் போட்டியில் 2 விக்கெட்டுக்கள் வீழ்ந்திருந்த போதும் இல. 4 இல் கூட துடுப்பெடுத்தாடும் விளையாடும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. இரண்டாவது போட்டியில் இலக்கம் 4 இல் களமிறங்கி 16 ஓட்டங்களைப் பெற்றிருந்தார். மூன்றாவது போட்டியில் இலக்கம் 3 இல் களமிறங்கி மறுபுறத்தில் விக்கெட்டுக்கள் வீழ்ந்து கொண்டிருக்கும் போது நிதானமாக 38 பந்துகளில் 61 ஓட்டங்களைக் குவித்திருந்தார். 4 ஆவது போட்டியில் 7 ஆம் இலக்கத்தில் இளமிறங்கி இறுதி ஓவரில் வெற்றிக்கான ஓட்டங்களாக 5* ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழக்காமல் இருந்தார். அந்தப் போட்டியில் பந்து வீச்சில் 4 ஓவர்கள் வீசி 27 ஓட்டங்களுக்கு 1 விக்கெட்டைக் கைப்பற்றியிருந்தார். 5 ஆவது போட்டியில் இலக்கம் 5 இல் களமிறங்கி 2 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்திருந்தார். அடுத்த 3 போட்டிகளிலும் வியஸ்காந்த், அஸலங்க போன்ற இளம் வீரர்களுக்கு வாய்ப்புக்களை வழங்கி ஒதுங்கி நின்றார். மற்ற அணிகளில் எல்லாம் தேசிய அணி வீரர்கள் தனக்கென ஓர் இடத்தை ஒதுக்கிக் கொண்டு விளையாடும் போது இவர் மட்டும் அணியில் தனக்கென கொடுக்கும் இடங்களில் எல்லாம் முகஞ்சுழிக்காமல் விளையாடியதோடு மட்டுமல்லாமல் இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்து ஒதுங்கியும் நின்றுள்ளார். Unsung Hero

5 போட்டிகளில் 5 தடவைகள் இவருடைய இடம் மாற்றப்பட்டுள்ளது.

சர்வதேச T20 போட்டிகளில் இலக்கம் 3 இல் 35 என்ற சராசரியைக் கொண்டுள்ள வீரர். LPL போட்டியையும் சேர்த்தால் இலக்கம் 3 இல் 4 போட்டிகளில் 2 அரைச்சதங்கள் உள்ளடங்களாக 41 என்ற சராசரியைக் கொண்டுள்ளவர். இப்படிப்பட்ட ஒரு வீரர் தன்னுடைய அணியின் சமநிலைக்காக தன்னுடைய இடத்தை விட்டுக்கொடுப்பது என்பது சாதாரண விடயமல்ல.

அத்துடன் அவருக்கு 30 மீட்டருக்கு அப்பால் பந்தை அடிப்பதற்கு கூட திராணியில்லை என்று விமர்சிப்பவர்களும் இருக்கின்றனர். பொதுவாக அவர் Slog செய்து ஆடும் வீரரல்ல. அத்துடன் அவர் ஒன்றும் பவர் ஹிட்டர் கிடையாது. நிதானமாக Drives, Lofted Drives, inside out, Late cut, scoop shots, Sweep shots, pull shots ஊடாக ஓட்டங்களைக் குவிக்கக் கூடிய வீரர்.
அதிலும் குறிப்பாக அதிகமாக இலக்கம் 5,6,7 களில் விளையாடக்கூடிய வீரர்கள் Slog Shots இனூடாக அதிரடியாக ஓட்டங்களைக் குவிக்கக் கூடியவர்கள். ஆனால் இவர் இலக்கம் 7 இல் கூட நிதானமாக விளையாடி 100+ துடுப்பாட்ட வேகத்தில் ஓட்டங்களைக் குவிக்கக் கூடிய வீரர். இதனால் இவரைப் போன்ற வீரர்களை கண்ணுக்குத் தெரியாமல் ஓட்டங்களைத் திருடும் வீரர்கள் என்று கூறுவார்கள்.

என்ன இருந்தாலும் சிறந்ததொரு Top Order பேட்ஸ்மனை, அணியில் Top Order பேட்ஸ்மென்கள் சொதப்பும் போது நிதானமாக விளையாடி அணியை மீளக் கட்டியெழுப்பும் பணிக்காக மட்டும் பயன்படுத்தி ஒரு சிறந்த வீரரின் திறமையை விரயம் செய்கிறார்களோ என்று தோன்றுகின்றது.

இறுதி போட்டியிலும் தனது Batting& Bowling
பணியை சிறப்பாக செய்தார்
Final Match Vs Galle Gladiator 36(19)2×6,3×4

⭕ Dananjaya De silva in ODI’s
Played as an opener to no 9

As an Opener
7 Inng | 285runs | 47.5avg | 78*HS |
50+scores – 3

At No 7
7Inng | 202runs | 40.4avg | 84Hs |
50+ score – 1

⭕ In Test
Played as a no3 batsman to no9

At no 3
18Inng | 559runs | 32.8avg | 173Hs |
50+ score – 2 | 100s – 2

At no 6
16Inng | 653runs | 46.6avg | 127Hs |
50+ score – 2 | 100s – 3

⭕ In t20is
Batted as an opener to no 7

At No 3
3 Inng | 105 Runs | 35Avg | 62HS | 50+Score – 1

At No 6
2 Inng | 67 Runs | 33 Avg | 57HS | 50+Score – 1

Be the first to comment

Leave a Reply