வவுனிகுளத்திற்குள் பாய்ந்து பட்டா வாகனம் விபத்து இருவர் நீரில் மூழ்கிய நிலையில் தேடல்

வவுனிகுளத்திற்குள் பாய்ந்து பட்டா வாகனம் விபத்து இருவர் நீரில் மூழ்கிய நிலையில் தேடல்

முல்லைத்தீவு – வவுனிக்குளத்திற்குள் பட்டா வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர்.

குறித்த சம்பவம் இன்று (19) மாலை 4.40 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

வவுனிக்குளம் அணைக்கட்டு வழியாக பட்டா வாகனத்தில் தந்தையும் மூன்று பிள்ளைகளும் சென்றுள்ளனர். இதன்போது கட்டுப்பாட்டை இழந்த வாகனம் அணைக்கட்டிலிருந்து கவிழ்ந்து குளத்திற்குள் விழுந்துள்ளது.

இதன்போது வாகனத்திலிருந்த ஒரு பிள்ளை தப்பி கரை ஏறியுள்ள போதும் தந்தையையும், இரு பிள்ளையும் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர்.

இந்நிலையில் வாகனத்தை மீட்டு காணாமல் போனவர்களை தேடும் நடவடிக்கை மக்கள் மற்றும் பொலிஸாரால் மேற்கொண்டதுடன் நீரில் மூழ்கிய நிலையில் காணப்பட்ட மற்றுமொரு பிள்ளையை பொது மக்கள் மீட்டெடுத்து மாங்குளம் வைத்தியசாலைக்கு எடுத்து சென்றனர்.

மேலும் மிகுதி நபர்களை தேடும் நடவடிக்கை தொடர்ந்து இடம்பெற்றுவருகின்றது.

Be the first to comment

Leave a Reply