இலங்கையில் மீண்டும் பிரதான PCR இயந்திரத்தில் கோளாறு?

இலங்கையில் பிரதான பி.சி.ஆர்.இயந்திரம் மீண்டும் கோளாறுக்கு உள்ளாகும் நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

முல்லேரியா வைத்தியசாலையில் பிரதான பி.சி.ஆர் பரிசோதனை இயந்திரம் உள்ளது.

அண்மையில் இந்த இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு ஏற்பட்டதன் காரணமாக கொரோனா பரிசோதனையும் ஸ்தம்பித்தமடைந்திருந்து.

சீனாவில் இருந்து தொழில்நுட்ப குழு வந்து திருத்தம் செய்தது. இதற்காக 250 மில்லியன் ரூபா செலவிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில் குறித்த இயந்திரத்திற்கு தேவையான இரசாயனங்கள் கொள்வனவு செய்யப்படாத காரணத்தினால் மீண்டும் செயலிழக்கும் கட்டத்தில் இருப்பதாக கூறப்படுகின்றது.

Be the first to comment

Leave a Reply