ராஜபக்ச அரசின் எச்சரிக்கை -தண்ணீர் கேட்டால் கட்டாயம் சுடுவோம்

மஹர சிறையில் மரணமடைந்த கைதிகளில் நால்வர் துப்பாக்கிச் சூட்டில் மரணம் என்று விசாரணை அறிக்கை கூறுகிறது.

ஆகவே கைதிகள் தங்களுக்குள் அடித்து கொண்டே செத்தார்கள் என அரசாங்கம் ஆரம்பத்தில் அறிவித்தது பச்சைப் பொய் எனக்கூறியுள்ள தமுகூ தலைவர் மனோ கணேசன், இது பற்றி மேலும் கூறியதாவது;

கைதிகள் இறப்பினால் கவலையடைந்தாலும், விசாரணை குழு உறுப்பினர்கள், துணிச்சலாக உண்மையை வெளிக்கொண்டு வந்ததையிட்டு மகிழ்ச்சியடைகிறேன்.

இதன்மூலம், இந்த அரசின் மீதான “அச்சம் அகழ்கிறது” என தெரிகிறது.

இந்த கைதிகளின் பல கோரிக்கைகளில் ஒன்று “குடிக்க தண்ணீர் தாருங்கள்” என்பதாகும்.

இதற்கு முன் ரதுபஸ்வல ஊரில் தண்ணீர் கேட்ட மக்களை இதே கட்சி அரசு சுட்டு கொன்றது. இப்போதும் அப்படிதான்.

ஆகவே குடிக்க தண்ணீர் கேட்டால் சுடும் அரசாங்கம் இதுவாகும்.

69 இலட்சம் வாக்குகளை பெற்று பதவிக்கு வந்த இந்த ராஜபக்ச அரசாங்கம், இந்த துப்பாக்கி சூடு மூலம் மக்களுக்கு ஒரு எச்சரிக்கையை அறிவிக்கிறது.

அதாவது, “தங்கம் கேட்டால்கூட, நாங்கள் தந்தாலும் தருவோம். ஆனால், தண்ணீர் கேட்டால் கட்டாயம் சுடுவோம்”.என்பதாகும்

Be the first to comment

Leave a Reply