மேல்மாகாணத்திலிருந்து வெளியேறுபவர்களை துரித அன்டிஜென் சோதனைக்கு உட்படுத்த திட்டம்

மேல்மாகாணத்திலிருந்து வெளியேறும் பயணிகளிற்கு இன்று காலை முதல் துரித அன்டிஜென் சோதனையை மேற்கொள்வதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

கொரோனா ஆபத்தினை அடையாளம் காண்பதற்கான மாகாணத்தின் மூன்று பகுதிகளில் துரித சோதனையை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்துள்ள சுகாதார அதிகாரிகள் வெளிமாவட்டங்களில் கொரோனா பரவுவதை தடுப்பதற்காகவே இந்த நடவடிக்கை என தெரிவித்துள்ளனர்.

கொழும்பு கண்டி வீதியில் நிட்டம்புவவிலும்,அவிசாவல கொழும்பு வீதியில் கொஸ்கமவிலும் சிலாப வீதியிலும் துரித அன்டிஜென் சோதனைகளை முன்னெடுக்கவுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இன்று காலை 8 மணிக்கு இதனை ஆரம்பிக்கவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Be the first to comment

Leave a Reply