நுவரெலியா மாவட்டத்தில் சுற்றுச்சூழல் நலன்சார் நடவடிக்கைகள் நாளை முதல் ஆரம்பம்

நுவரெலியா மாவட்டத்தின் சுற்றுலா அபிவிருத்தி வலயத்தில் சுற் றாடல் நேயமிக்க வேலைத்திட்டங்கள் நாளை ஆரம்பிக்கப்படும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரின் ஆலோசனைக்கு அமைவாக நகர அபிவிருத்தி அதிகார சபை இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுக்கின்றது.

கித்துள்கலவிலிருந்து நுவரெலியா வரையும், நுவரெலியாவிலிருந்து கண்டி, பதுளை வரையும் விசேட சுற்றுலா வலயமாக அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.

குறித்த பிரதான வீதிகளின் இரு மருங்கும் சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் நவீன மயப்படுத்தப்படவுள்ளன. பூங்கா, நடைபாதை, வர்த்தக கொட்டில்கள், சிற்றுண்டிச்சாலை உட்பட ஹோட்டல்களும் இங்கு அமைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Be the first to comment

Leave a Reply