கொரோனா மேல் மாகாணத்திற்கு வெளியே பரவும் ஆபத்து அதிகம் – சுடத் சமரவீர

கொரோனா வைரஸ் மேல்மாகாணத்திற்கு அப்பால் பரவும் ஆபத்து காணப்படுகின்றது என தொற்றுநோயியல் நிபுணர் சுடத்சமரவீரதெரிவித்துள்ளார்.
இது எப்போதும் எதிர்பார்க்கப்பட்ட விடயம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேல்;மாகாணத்திற்கு அப்பால் கொரோனா வைரஸ் பரவும் ஆபத்தை நாடு எதிர்கொள்கின்றதா என்ற கேள்விக்கே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஆம் இது வைரஸ் இந்த ஆபத்து ஆரம்பத்திலிருந்தே காணப்படுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நோயாளர்களுடன் தொடர்பிலிருப்பவர்களை கண்டுபிடித்தல் சோதனை செய்தல் தனிமைப்படுத்தல் ஆகிய நடவடிக்கைகள் தொடரும் என தெரிவித்துள்ள அவர் கொரோனாவினால் பாதிக்கப்படும் வாய்ப்புள்ளவர்கள் என கருதப்படும் குழுவினரை இலக்கு வைத்து சோதனையிடுவதன் மூலமே நோயாளிகளை கண்டுபிடிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Be the first to comment

Leave a Reply