இலங்கைக்கு தடுப்பூசி விரைவில் கிடையாது – கொரோனா வைரஸ் விவகாரங்களுக்கான ராஜாங்க அமைச்சர் சுதர்சினி கூறுகிறார்

இலங்கைக்கு கொரோனா வைரஸ் மருந்து கூடிய விரைவில் கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை என கொரோனா வைரஸ் விவகாரங்களுக்கான இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்னான்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் மருந்தை இறக்குமதி செய்வதற்கான பேச்சுக்கள் எதனையும் மேற்கொள்ளவில்லை எனவும் அவர் கூறினார். அனைத்து மருந்துகளும் இன்னும் சோதனை நிலையிலேயே உள்ளன என்றும் , உலக சுகாதார நிறுவனம் எந்த மருந்துக்கும் இன்னமும் அனுமதி வழங்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ள இராஜாங்க அமைச்சர், உலகசுகாதார நிறுவனம்அங்கீகாரமளித்ததும் மிகச்சிறந்த மருந்தை இலங்கை அரசு தெரிவு செய்யும் எனவும் குறிப்பிட்டார்.

தற்போது சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ள மருந்துகள் குறித்த முக்கியமான விஞ்ஞான ரீதியிலான தரவுகள் இலங்கைக்கு இன்னமும் கிடைக்கவில்லை எனவும் அவர் கூறினார். இலங்கை நிலைமையை உன்னிப்பாக அவதானித்து வருகின்றது எனத் தெரிவித்துள்ள இராஜாங்க அமைச்சர், அதேவேளை கொரோனா வைரஸ் மருந்துகளுக்கு அனுமதியளிப்பதற்கு இன்னமும் சில வருடங்களாகும் என் பதையும் அறிந்துள்ளது எனவும் தெரிவித்தார்.

Be the first to comment

Leave a Reply