கிண்ணத்தை சுவீகரித்த யாழ்ப்பாண அணிக்கு பிரதமர் மகிந்த கூறிய செய்தி!

லங்கா பிரீமியர் லீக் ரி20 தொடரில் யாழ்ப்பாணம் ஸ்ராலியன்ஸ் அணி வெற்றிக் கிண்ணத்தைக் சுவீகரித்தது.

ஹம்பாந்தோட்டை மகிந்த ராஜபக்ச மைதானத்தில் இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் காலி கிளாடியேற்றர்ஸ் மற்றும் யாழ்ப்பாணம் ஸ்ராலியன்ஸ் அணிகள் மோதின.

நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய யாழ்ப்பாண அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் ஆறு விக்கெட்டுகள் இழப்பிற்கு 188 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

அணிசார்பாக, சொயிப் மலிக் 46 , திசார பெரேரா ஆட்டமிழக்காமல் 39,தனஞ்சய டி சில்வா 33 ஓட்டங்களைபெற்றுக்கொண்டனர். பந்து வீச்சில் தனஞ்சய லக்சன் மூன்று விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

189 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய காலி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 135 ஓட்டங்களைப் பெற்று 53 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

அணிசார்பாக, பானுக ராஜபக்ச 40 , அசம் கான் 36 ஓட்டங்களையும் அதிகபட்சமாகப் பெற்றுக்கொண்டனர்.

பந்துவீச்சில், உஸ்மன் சின்வாரி மற்றும் சொய்ப் மலிக் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

போட்டியின் சிறப்பாட்டக்காரராக சொஹைப் மாலிக்கும், தொடரின் சிறந்த வீரராக வனிந்து ஹசரங்கவும் தெரிவாகினர்.

இந்தப் போட்டியை பிரதமர் மகிந்த ராஜபக்ச அவரது பாரியார் சிரந்தி ராஜபக்ச ஆகியோர் நேடியாக பார்வையிட்டனர்.

இதேவேளை முதலாவது லங்கா பிறீமியர் தொடரை வெற்றிகொண்ட யாழ்ப்பாண அணிக்கு பிரதமர் மகிந்த தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டார்.

Be the first to comment

Leave a Reply