
இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்குமாறு அமெரிக்காவிற்கான இலங்கையின் புதிய தூதுவர் ரவிநாத ஆரியசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.
சர்வ மத பிரார்த்தனையின் பின் – பதவி ஏற்றுக்கொண்ட அவர், அமெரிக்காவில் வசிக்கும் இலங்கையர்களிடம் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
இத்தகவலை வோசிங்டனில் அமைந்துள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.
இவர் இதற்கு முன் பல நாடுகளின் தூதுவராகவும் வௌிவிவகார அமைச்சின் செயலாளராகவும் செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Be the first to comment