அரசியலிலிருந்து ஓய்வு பெறும் தமிழரசுக் கட்சியின் பிரமுகர்?

வட மாகாண முன்னாள் சுகாதார அமைச்சரும் தமிழரசுக் கட்சியின் தற்போதைய பதில் செயலாளருமான ப.சத்தியலிங்கத்திற்கு யாழ் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாக வைத்திய அதிகாரி பதவி கிடைக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் அவர் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவாரா என கேள்வி எழத்தொடங்கியுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்திற்கு வெற்றிடமாக காணப்பட்ட வைத்திய அதிகாரி பதவிக்கு ப. சத்தியலிங்கமும் விண்ணப்பித்திருந்தார்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னர் இதற்கான நேர்முகத்தேர்வுகள் இடம்பெற்ற நிலையில் நேர்முகத்தேர்வின் போது குறித்த பதவி கிடைக்கும் பட்சத்தில் தொடர்ந்தும் அரசியலில் ஈடுபடுவீர்களா? முன்பு சுகாதார அமைச்சராக இருந்தீர்கள் எதிர்வரும் காலத்தில் முதலமைச்சராவதற்கு எத்தனிப்பீர்களா என கேட்கப்பட்டது.

அதன்போது அவ்வாறான எண்ணம் தனக்கு இல்லை என அவர் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் குறித்த பதவிக்கான நியமனம் ப. சத்தியலிங்கத்திற்கே கிடைப்பதற்கான வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில் இவ்விடயம் தொடர்பில் அவரிடம் கேட்டபோது,

நேர்முகத்தேர்வுக்கு நீண்ட காலத்திற்கு முன்னர் சென்றிருந்தேன். தற்போது நியமனம் கிடைத்துள்ளதாக தெரிவிக்கின்றனர். எனினும் எவ்விதமான கடிதமோ தொலைபேசி மூலமான தகவலோ எனக்கு கிடைக்கவில்லை என தெரிவித்தார்.

Be the first to comment

Leave a Reply