நேற்றைய தினம் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் விபரம்

கொரோனா தொற்றால் அடையாளம் காணப்பட்ட நிலை யில் மேலும் 03பேர்  நேற்றைய தினம் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றால் உயி ரிழந்தவர்களின் எண்ணிக்கை 160 ஆக உயர்ந்துள்ளது.

கொலன்னாவ பகுதியைச் சேர்ந்த 50 வயதான பெண் ஒருவர், கொழும்பு 09 பகுதியைச் சேர்ந்த 78 வயதான ஆண் ஒருவர், பண்டாரகம பகுதியைச் சேர்ந்த 43 வயதான பெண் ஒருவர் இவ்வாறு கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

01,கொலன்னாவ பகுதியைச் சேர்ந்த 50 வயதான பெண் ஒருவர் கொழும்பு தனியார் வைத்தியசாயைில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், ஹோமாகம ஆதார வைத்தி யசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலை யில், சிறுநீரகம் பாதிப்பு மற்றும் கொரோனா தொற்றால் ஏற்பட்ட நிமோனியா காரணமாக 2020 டிசம்பர் 14 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.

02. கொழும்பு 09 பகுதியைச் சேர்ந்த 78 வயதான ஆண் ஒருவர் தேசிய தொற்று நோயியல் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இரத்தம் விஷமாதல், பல உறுப்பு செய லிழப்பு, கொரோனா தொற்றால் ஏற்பட்ட நிமோனியா காரணமாக 2020 டிசம்பர் 15 ஆம் திகதி உயிரிழந் துள்ளார்.

03. பண்டாரகம பகுதியைச் சேர்ந்த 43 வயதான பெண் ஒருவர் பாணதுரை வைத்தியசாலையிலிருந்து ஹோ மாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொரோனா தொற்றால் ஏற்பட்ட நிமோனியா மற்றும் இரத்த விஷமாதல், பல உறுப்பு செய லிழப்பு மற்றும் மாரடைப்பால் காரணமாக 2020 டிசம்பர் 16 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.

அதன்படி இலங்கையில் கொரோனா தொற்றால் உயி ரிழந்தவர்களின் எண்ணிக்கை 160 ஆக உயர்ந் துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது

Be the first to comment

Leave a Reply