மாலைதீவில் உடல்களை அடக்கம் செய்வது இலங்கையில் முஸ்லீம்கள் புறக்கணிக்கப்படும் நிலையை ஏற்படுத்தும்- ஐநா நிபுணர்

இலங்கையில் கொரோனா வைரசினால் உயிரிழந்த முஸ்லீம்களின் உடல்களை மாலைதீவில் அடக்கம் செய்ய அனுமதிப்பது குறித்து மாலைதீவு அரசாங்கம் தெரிவித்திருப்பதற்கு ஐக்கியநாடுகள் மனித உரிமை நிபுணர் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார்.
மதநம்பிக்கைகள் குறித்த ஐக்கியநாடுகளின் விசேட அறிக்கையாளர் அஹ்மெட் சஹீட் இதனை தெரிவித்துள்ளார்.

ஐநா நிபுணர் கொரோனாவினால் உயிரிழந்த இலங்கை முஸ்லீம்களின் உடல்களை மாலைதீவில் அடக்கம் செய்வது இலங்கையில் முஸ்லீம் சமூகம் மேலும் விலக்கிவைக்கப்படுவதற்கு வழிவகுக்கும் என தெரிவித்துள்ளார்.

இலங்கை ஜனாதிபதியின் வேண்டுகோளிற்கான மாலைதீவில் பதில் ஆழ்ந்த கவலையை அளிக்கின்றது என ஐந நிபுணர் தெரிவித்துள்ளார்.
இந்த வேண்டுகோள் முஸ்லீம் சமூகத்திடமிருந்தோ அல்லது அவர்களின் சம்மதத்துடனோ வெளியாகவில்லை போல தோன்றுகின்றது என ஐநா நிபுணர் அல் ஜசீராவிற்கு தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக இலங்கையில் முஸ்லீம் சமூகம் மேலும் ஒதுக்கிவைக்கப்படும் நிலை உருவாகலாம் என குறிப்பிட்டுள்ள அவர் உலக சுகாதார ஸ்தாபனம் தனது வழிகாட்டுதல்களில் கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்யலாம் தகனம் செய்யலாம் என தெரிவித்துள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Be the first to comment

Leave a Reply