கொழும்பு மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்தை தாண்டியது

Coronavirus 2019-nCov novel coronavirus concept background. Realistic Vector illustration EPS10

கொவிட் -19 இரண்டாவது அலையின் போது கொழும்பு மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக் கை 15,000 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.

இலங்கையில் நேற்றைய தினம் கொரோனா தொற்றாளர் களாக அடையாளம் காணப்பட்ட 616 பேரில் 266 பேர் கொ ழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என கொவிட்-19 தடுப் பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, கடந்த ஒக்டோபர் மாதம் 04 ஆம் திகதியிலிரு ந்து தற்போது வரை கொழும்பு மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 15ஆயிரத்து 123 ஆக அதிகரித்துள்ளது.

கண்டி மாவட்டத்தில் 99 பேர் , கம்பஹா மாவட்டத்தில் 94 பேர், களுத்துறை மாவட்டத்தில் 48 பேர், இரத்தினபுரி மா வட்டத்தில் 31 பேர் மற்றும் அம்பாறை மாவட்டத்தில் 24 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப் ட்டுள்ளனர்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் 11 பேர், மாத்தறை மாவட்டத் தில் 08 பேர் , கேகாலை மாவட்டத்தில் 08 பேர், புத்தளம் மா வட்டத்தில் 04 பேர் , குருணாகல் மாவட்டத்தில் 04 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

காலி மாவட்டத்தில் 03 பேர், நுவரெலியா, அனுராத புரம், பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களில் தலா 02 பேர் என்ற அடிப் படையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவர் என்ற அடிப் படையில் அடையாளம் காணப் பட்டுள்ளனர்.

அத்துடன், வெளிநாட்டிலிருந்து வருகை தந்த 05 பேர் கொ ரோனா தொற் றாளர்களாக நேற்றைய தினம் அடை யாளம் காணப்பட்டுள்ளனர் என கொவிட்-19 தடுப் பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

Be the first to comment

Leave a Reply