தொடர்ந்தும் Lockdown அமுலிலுள்ள பிரதேசங்கள்

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, அம்பாறை, மாத்தறை, காலி, இரத்தினபுரி மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களின் ஒரு சில பகுதிகளில் தொடர்ந்தும் தனிமைப்படுத்தல் அமுலிலுள்ளது.

கொழும்பு மாவட்டத்தின் முகத்துவாரம், கிரேண்ட்பாஸ், ஆட்டுப்பட்டித்தெரு, டேம் வீதி, வாழைத்தோட்டம், மாளிகாவத்தை, மருதானை, தெமட்டகொடை மற்றும் கொட்டாஞ்சேனை ஆகிய பொலிஸ் பிரிவுகள் தொடர்ந்தும் முடக்கப்பட்டுள்ளன.

கொழும்பின் வேகந்தை, வணாத்தமுல்லை, சலாமுல்ல, ஹுனுப்பிட்டி, 60 ஆவது தோட்டம், கோகிலா வீதி, பெர்குசன் வீதி தெற்கு மற்றும் மயூரா பிளேஸ் ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

கம்பஹா மாவட்டத்தின் பேலியகொடைவத்தை, பேலியகொடை கங்கபட, மீகாவத்தை, வெலேகொட வடக்கு, ஹிரிபிட்டி தெற்கு சுதந்திர மாவத்தை, நைதுவ, துவேவத்தை, ரோஹண விகாரை மாவத்தை, வெடிகந்தை, வாரண ஆலய வீதி, கந்தொட்ட வீதி மற்றும் ஹிட்ரா மாவத்தை ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் முடக்கப்பட்டுள்ளன.

களுத்துறை மாவட்டத்தின் அடலுகம கிழக்கு, அடலுகம மேற்கு, எப்பிடமுல்லை, போகஹவத்தை, கொரவல, கல்கேமந்திய, பமுனுமுல்லை, வேகங்கல்ல மேற்கு, வேகங்கல்ல கிழக்கு, மரிக்கார் வீதி மற்றும் கொட்டாவத்தை ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தலின் கீழுள்ளன.

கண்டி மாவட்டத்தின் புளுகஹதென்ன, தெலம்புபஹவத்தை, போகம்பறை, பூர்ணவத்தை மேற்கு கிராம சேவகர் பிரிவுகள் தொடர்ந்தும் முடக்கப்பட்டுள்ளன.

அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவு மாத்திரம் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

மாத்தறையின் கல்பொக்க கிழக்கு, கல்பொக்க மேற்கு, அலுத்வீதி, கொஹுனுகமுவ, ஹெட்டி வீதி ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் தொடர்ந்தும் முடக்கப்பட்டுள்ளன.

காலி மாவட்டத்தின் மிலிந்துவ, கூங்கஹா, தலப்பிட்டி, தன்கஹகெதர கிழக்கு, தெதுகொட வடக்கு, தெதுகொட தெற்கு மற்றும் மகுளுவ ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இதேபோன்று, இரத்தினபுரியின் கொடிகமுவ கிராம சேவகர் பிரிவு உள்ளூர் அதிகாரிகளால் முடக்கப்பட்டுள்ளது.

மொனராகலையின் அளுபொத்த கிராம உத்தியோகத்தர் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தநிலையில் மேலும் 03 கொரோனா மரணங்கள் இன்று (16) பதிவாகியதை அடுத்து, நாட்டில் இதுவரை 157 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன.

இதுவரை 34,121 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Be the first to comment

Leave a Reply