அதிகாலையில் ஏற்பட்ட அனர்த்தம்! தாயும் மகனும் பலி

அநுரதபுரம்- பாதெனிய பஹலபலல்ல என்ற இடத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற வீதி விபத்தில் தாயும் மகனும் உயிரிழந்துள்ளனர்.

இவ் விபத்தின் போது 32 வயதுடைய தாயும் 3 வயது மகனுமே சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வீதியில் சென்று கொண்டிருந்தவர்களை வாகனம் ஒன்று மோதியபோதே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து வாகனத்தில் பயணித்த 11பேரில் 8 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

எனினும் வாகன சாரதி சம்பவ இடத்தில் இருந்து தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Be the first to comment

Leave a Reply