தப்பிச்சென்ற கொரோனா நோயாளரை கண்டுபிடிக்க மக்கள் உதவியை நாடும் பொலிஸார்

வெலிசறை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தநிலையில் தப்பிச்சென்றுள்ள கொரோனா நோயாளரை தேடி கண்டுபிடிப்பதற்காக பொலிஸார் பொதுமக்களின் உதவி கோரியுள்ளனர்.

மேலே உள்ள புகைப்படத்தில் உள்ள நபர் தொடர்பில் தகவல்கள் கிடைக்கப்பெற்றால் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திலோ அல்லது கீழே குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி இலக்கங்களின் ஊடாகவோ அறியத்தருமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மஹபாகே பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி – 0718 591 597
அவசர அழைப்புப் பிரிவு – 0112 433 333 / 119

குறித்த நபர் மருதானை பிரதேசத்தை சேர்ந்தவர் என போலியான முகவரியையே வழங்கியுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

காச நோயாளரான 43 வயதான குறித்த நோயாளர், போதைப்பொருளுக்கு அடியானவர் என்பது தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

சந்தேக நபர் கிரேண்ட்பாஸ் பகுதியை சேர்ந்தவர் என்பது கண்டறியப்பட்டுள்ள நிலையில், இந்த நோயாளரை தேடும் பணிகள் மஹபாகே பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Be the first to comment

Leave a Reply