விமான விபத்து தொடர்பான விசாரணைகள் ஆரம்பம்

இலங்கை விமானப் படைக்கு சொந்தமான PT 6 ரக பயிற்சி விமானம் ஒன்று விபத்துக்குள்ளானமை தொடர்பான விசாரணைகளை அதற்காக நியமிக்கப்பட்ட குழு ஆரம்பித்துள்ளது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகள் நேற்று (15) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக விமானப் படை ஊடகப் பேச்சாளர் குரூப் கெப்டன் துஷான் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

திருகோணமலை – சீனன்குடா விமானப் படை தளத்திலிருந்து பயணத்தை ஆரம்பித்த குறித்த விமானம் கந்தளாய், சூரியபுர ஜன ரஞ்சன வாவிக்கு அருகில் நேற்று விபத்துள்ளானது.

நேற்று பிற்பகல் 1.05 மணியளவில் பயிற்சி நடவடிக்கைக்காக பயணத்தை ஆரம்பித்த விமானம், பிற்பகல் 1.15 மணியளவில் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது.

சீனன்குடா விமானப் படைத்தளத்தில் இருந்து 14 கடல்மைல் தொலைவில் விமானம் விபத்துக்குள்ளானதாக விமானப்படை தெரிவித்துள்ளது.

இந்த விபத்தில் பயிற்சி விமானியான ஷலிந்த அமரகோன் உயிரிழந்தார்.

2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கெடெட் அதிகாரியாக பயிற்சியை ஆரம்பித்த இவர், அதே வருடம் ஜூலை மாதம் விமானிக்கான பயிற்சியை ஆரம்பித்திருந்தார்.

Be the first to comment

Leave a Reply