எல்லை தாண்டிய இந்திய மீனவர்கள் கைது டக்ளஸ் தேவானந்தாவின் அறிவுறுத்தல்

டக்ளஸ் தேவானந்தாவின் அறிவுறுத்தல், கடற்றொழில் திணைக்களம் – கடற்படை கூட்டு நடவடிக்கை !. எல்லை தாண்டிய இந்திய மீனவர்கள் கைது …
,…..,..
இலங்கை கடற் பரப்பினுள் நுழைந்து கடல் வளத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலான சட்ட விரோத மீன்பிடித் தொழில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அண்மைய நாட்களாக இந்திய மீனவர்களின் அத்துமீறல் அதிகரித்திருந்த நிலையில், கடல் வளத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்படுகின்ற அனைத்து சட்ட விரோத நடவடிக்கைகளுக்கும் எதிராக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கடற்றொழில் திணைக்களம் மற்றும் கடற்படையினருக்கு கடற்றொழில் அமைச்சர் என்ற வகையில் தலைவர் டக்ளஸ் தேவானந்தாவினால் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில், நேற்று முன்தினம் (14.12.2020) இந்திய மீனவர்கள் 22 பேர் கைது செய்யப்பட்டதுடன், 3 படகுகள் மற்றும் மீன்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இராமேஸ்வரத்தில் இருந்து சுமார் 400 படகுகளில் வந்திருந்த மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்தனர்.

இதன்போது, இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட குறித்த மீனவர்கள், கடற்றொழில் திணைக்களத்தினரிடம் இன்று ஒப்படைக்கப்பட்டனர்.

இருந்த போதிலும் கொறோனா அச்சுறுத்தல் காரணமாக கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டது.

இந்நிலையில், கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளினால் குறித்த விடயம் தலைவர் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. உடனடியாக சம்மந்தப்பட்ட தரப்புக்களுடன் கலந்துரையாடியதன் அடிப்படையில் கைது செய்யப்பட்டவர்களை கரைநகர் கடற்படை தளத்தில் படகுகளிலேயே தடுத்து வைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது.

இந்நிலையில், படகுகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களுக்கு எதிராக கடற்றொழில் திணைக்களத்தினரால் ஊர்காவற்துறை நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், எதிர்வரும் 18 ஆம் திகதி வரை தடுத்து வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Be the first to comment

Leave a Reply