திருகோணமலை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திடீர் கைது!

திருகோணமலை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப் கைது செய்யப்பட்டுள்ளார் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

திருகோணமலை – கிண்ணியா பகுதியிலுள்ள அவரது வீட்டில் வைத்து இன்று காலை 6.30க்கு அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினரால் அப்துல்லா மஹ்ரூப் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சதொச நிறுவனத்தின் வாகனமொன்றை முறைகேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ், அப்துல்லா மஹ்ரூப் அழைத்து செல்லப்படுவதாக குற்றத் தடுப்பு பிரிவினர் உறவினர்களிடம் தெரிவித்துள்ளனர்.

Be the first to comment

Leave a Reply