மட்டக்களப்பு மாநகர சபையின் வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றம்: அமர்வின் பின்னர் அமைதியின்மை

மட்டக்களப்பு மாநகர சபையின் 2021 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் இன்று நிறைவேற்றப்பட்டது.

எனினும், அமர்வின் பின்னர் அமைதியின்மை ஏற்பட்டது.

மட்டக்களப்பு மாநகர மேயர் தி.சரவணபவன் தலைமையில் இன்றைய அமர்வு ஆரம்பமான போது வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டது.

இதன்போது, வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 20 வாக்குகளும் எதிராக 18 வாக்குகளும் அளிக்கப்பட்ட நிலையில், மேலதிக இரண்டு வாக்குகளினால் வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்டது.

மாநகர சபை அமர்வு இடம்பெற்ற வேளையில், மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் அங்கு பிரசன்னமாகியிருந்தனர்.

வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிப்பதாகக் கூறிய சிலர் அதற்கு ஆதரவு தெரிவித்ததாகக் கூறி சிலர் அமர்வின் பின்னர் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

Be the first to comment

Leave a Reply