குற்றச்செயல்களுக்கான அபராதத் தொகையில் திருத்தங்களை மேற்கொள்ள அமைச்சரவை அனுமதி

தண்டனை சட்டக்கோவையில் காணப்படும் அபராதத் தொகையில் திருத்தங்களை மேற்கொள்ள அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

நீதி அமைச்சினால் இதற்கான பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டது.

இந்த விடயம் தொடர்பில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போது அமைச்சரவை இணை பேச்சாளர் அமைச்சர் உதய கம்மன்பில தௌிவுபடுத்தினார்.

குற்றச்செயல்களுக்கான அபராதத் தொகையை அறவிடுவதனூடாக மக்கள் குற்றங்களை செய்யாதிருக்கும் வண்ணம் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என அமைச்சர் கூறினார்.

தற்போது அறவிடப்படும் அபராதத் தொகை குறித்து எவ்வித அச்சமும் இன்மையாலேயே மக்கள் குற்றச்செயல்களில் ஈடுபடுவதாகவும் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

இதனால் தண்டனை சட்டக்கோவையில் காணப்படும் அபராதத் தொகையில் திருத்தங்களை மேற்கொண்டு அதற்கான புதிய சட்டங்களை உருவாக்க அமைச்சரவை அனுமதி வழங்கியதாக அவர் சுட்டிக்காட்டினார்.

Be the first to comment

Leave a Reply