கொழும்பைச் சேர்ந்த பெண் உட்பட மூவர் கல்பிட்டி ஹோட்டலொன்றில் கைது!

கார் ஒன்றில் எடுத்து செல்லப்பட்ட 6 1/2 கிலோ கஞ்சா கல்பிட்டி, பாலாவி வீதியில் கரம்பை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பொலிஸ் மற்றும் கடற்படை சோதனை சாவடியில் வைத்து கைப்பற்றப்பட்டது.

அந்த வாகனத்தில் மூவர் பயணித்துள்ளனர். அவர்களில் ஒருவர் தப்பி ஓட முயற்சித்த போது கடற்படை வீரர்களினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன் அந்த வாகனத்திலிருந்த சுமார் ஒரு இலட்சம் ரூபா பணமும் கைப்பற்றப்பட்டன.

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நபர்களிடம் மேற் கொள்ளப்பட்ட விசாரணை மூலம் கல்பிட்டியில் அமைந்துள்ள ஹோட்டலொன்றிலிருந்த மேலும் 20 கிலோ கேரள கஞ்சாவும் கைப்பற்றப்பட்டன.

ஹோட்டலின் கூரைப்பகுதி மற்றும் கட்டிலில் இவை மறைத்து வைக்கப்பட்டிருந்தன.

ஹோட்டலிலிருந்த ஒரு பெண் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட அனைவரும் கொழும்பு பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்று விசாரணை மூலம் தெரிய வந்துள்ளது.

Be the first to comment

Leave a Reply