களுத்துறை மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2045 ஆக உயர்வு

கடந்த ஒக்டோபர் மாதம் 4 ஆம் திகதியிலிருந்து தற்போது வரை களுத்துறை மாவட்டத்தில் கொரோனா தொற் றாளர்களின் எண்ணிக்கை 2045 ஆக உயர்ந்துள்ளது.

இலங்கையில் நேற்றைய தினம் கொரோனா தொற்றாளர் களாக அடையாளம் காணப்பட்ட 688 பேரில் 430 பேர் கொ ழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என கொவிட்-19 தடுப் பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

கொழும்பு மாவட்டத்தில் 200 பேர், களுத்துறை மாவட்டத் தில் 117 பேர் மற்றும் கம்பஹா மாவட்டத்தில் 113 பேர் கொ ரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப் பட்டுள்ளனர்.

கொழும்பு மாவட்டத்தில் 200 பேரில் பொரளை பகுதியில் 65 பேர் மற்றும் மகசின் சிறை கைதிகள் 58 பேர் அடை யாளம் காணப்பட்டுள்ளனர்.

களுத்துறை மாவட்டத்தில் 117 பேர் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டனர்.

அதன்படி கடந்த ஒக்டோபர் மாதம் 4 ஆம் திகதியிலிருந்து தற்போது வரை களுத்துறை மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2045 ஆக உயர்ந்துள்ளது.

கம்பஹா மாவட்டத்தில் 113பேர், முல்லைத்தீவு மாவட்டத் தில் 55 பேர், காலி மாவட்டத்தில் 48 பேர், நுவரெலியா மாவட்டத்தில் 38 பேர் மற்றும் அம்பாறை மாவட்டத்தில் 28 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

குருணாகல் மாவட்டத்தில் 17 பேர், கண்டி மாவட்டத்தில் 16 பேர், மாத்தளை மாவட்டத்தில் 08 பேர் , இரத்தினபுரி , மொ னராகலை ஆகிய மாவட்டங்களில் தலா 13 பேர் என்ற அடிப் படையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

வவுனியா மாவட்டத்தில் 07 பேர், யாழ்ப்பாண மாவட்டத் தில் 06 பேர், கேகாலை மாவட்டத்தில் 02 பேர், புத்தளம், மாத்தறை, அம்பாந்தோட்டை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவர் என்ற அடிப் படை யில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

வெளிநாட்டிலிருந்து வருகை தந்த 3 பேர் உட்பட கொ ரோனா தொற் றாளர்களாக நேற்றைய தினம் அடை யாளம் காணப்பட்டுள்ளனர் என கொவிட்-19 தடுப்பிற் கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

Be the first to comment

Leave a Reply