சங்கானை சந்தையில் 100 வியாபாரிகளுக்கு பி.சி.ஆர் பரிசோதனை!

மருதனார்மடம் மரக்கறிச் சந்தையுடன் தொடர்புடைய சங்கானை மரக்கறிச் சந்தை வியாபாரிகளுக்கு இன்றைய தினம் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வலி.மேற்குப் பிரதேச சபையின் தவிசாளர் த.நடனேந்திரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான ஐபிசி தமிழ் ஊடகத்திற்கு தகவல் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

இதில் சுமார் இன்றைய தினம் மாத்திரம் 100பேருக்கான பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஏனையவர்களுக்கான பரிசோதனை நாளை அல்லது நாளை மறுதினம் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சங்கானை பிரதேச வைத்தியசாலையின் சுகாதாரப் பணிப்பாளர் ஜெசீதரன் தலைமையில் வட்டுக்கோட்டைப் பொலிஸாரின் பங்களிப்புடன் குறித்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இன்றைய தினம் வெளியாகும் பரிசோதனை முடிவின் படி மீண்டும் மரக்கறிச் சந்தையினை திறப்பது தொடர்பான முடிவுகள் எட்டப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

குறித்த சந்தையின் வியாபாரிகள் மருதனார்மடம் மரக்கறிச் சந்தையிலும் வியாபார தொடர்புகள் பேணுகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

Be the first to comment

Leave a Reply