முஸ்லிம்களின் ஜனாஸா எரிப்பு தொடர்பான போராட்டத்தில்!

முஸ்லிம்களின் ஜனாஸாக்களை எரிப்பதை எதிர்த்து தேசிய ரீதியாக கபனின் ஒரு பகுதியான வெள்ளைத் துணியூடாக மண்ணறையை மறுப்பவர்களுக்கு அறிவூட்டும் அமைதியான அடையாள எதிர்ப்புப் போராட்டம் நாடளாவிய ரீதியில் இடம்பெற்று வருகின்றது.

நாட்டில் அனைத்து இன மக்களதும் கவனத்தையும் ஈர்த்துள்ள நிலையில் ஓட்டமாவடி பிரதேசத்தில் இன்று திங்கட்கிழமை வெள்ளைத் துணியை கட்டும் அமைதியான அடையாள எதிர்ப்புப் போராட்டம் இடம்பெற்றது.

இதன்போது ஓட்டமாவடி பிரதான வீதியிலுள்ள மணிக்கூட்டு கோபுர சுற்று வட்டத்தில் பிரதேசத்திலுள்ள அமைப்பினர், அரசியல் பிரமுகர்கள், மூவின மக்கள் எனப் பலர் கலந்து கொண்டு வெள்ளைத் துணியை கட்டி தங்களது எதிர்ப்பினை வெளிக்காட்டினர்.

Be the first to comment

Leave a Reply