நேற்றைய தினம் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் விபரம்

கொரோனா தொற்றால் அடையாளம் காணப்பட்ட நிலையில் நேற்றைய தினம் மேலும் 03 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றால் உயி ரிழந்தவர்களின் எண்ணிக்கை 152 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில், கொழும்பு 10 சேர்ந்த 62 வயதான பெண் ஒருவர் ,  வத்தளைப் பகுதியைச் சேர்ந்த 71 வயதான பெண் ஒருவர் மற்றும் மாத்தளைப் பகுதியைச் சேர்ந்த 76 வயதான ஆண் ஒருவர்  இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

01.கொழும்பு 10ஐச் சேர்ந்த 62 வயதான பெண் ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொரோனா தொற்றாளர் என அடை யாளம் காணப்பட்டதை அடுத்துக் குறித்த பெண் முல்லேரியா ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் கொரோனா தொற்றால் ஏற்பட்ட நிமோனியா மற்றும் மாரடைப்பு காரணமாக 2020 டிசம்பர் 12 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.

02. வத்தளை பகுதியைச் சேர்ந்த 71 வயதான பெண் ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தேசிய தொற்று நோயியல் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொரோனா தொற்றால் ஏற்பட்ட நிமோனியா மற்றும் இரத்தம் விஷமானமையினால் ஏற்பட்ட கடுமையான மாரடைப்பால் 2020 டிசம்பர் 12 ஆம் திகதி உயிரி ழந்துள்ளார்.

03. மாத்தளை பகுதியைச் சேர்ந்த 76 வயதான ஆண் ஒருவர் கொழும்பு தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொரோனா தொற்றாளர் என அடையாளம் காணப்பட்டதை அடுத்து அநுராதபுரம் மா வட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொரோனா தொற்றால் ஏற்பட்ட நிமோனியா மற்றும் மாரடைப்பால் 2020 டிசம்பர் 12 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.

அதன் படி, இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 152 ஆக உயர்ந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Be the first to comment

Leave a Reply