வவுனியா சிறைச்சாலையில் கொரோனா அச்சம்!

வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் இருந்த கைதி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

திருகோணமலையை சேர்ந்த குறித்த நபருக்கு கடந்த 12ஆம் திகதி பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்வதற்கான மாதிரிகள் பெறப்பட்டிருந்தது.

நேற்றய தினம் பரிசோதனைக்கான முடிவுகள் கிடைக்கப்பெற்றது. அதன்படி அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதியாகியுள்ளது.

இவ்விடயம் தொடர்பான ஏனைய நடவடிக்கைகளை சுகாதார பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Be the first to comment

Leave a Reply