வவுனியா சாளம்பைக்குளம் பாடசாலை மூடப்பட்டது

வவுனியா சாளம்பைக்குளம் அல் அக் ஷா முஸ்லிம் பாடசாலையை எதிர் வரும் 16 ஆம் திகதி வரை மூடுவதற்கான ஆலோசனை சுகாதார திணைக்கள அதிகாரிகளால் வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி வரும் 16 ஆம் திகதி புதன்கிழமை வரை பாடசாலை மூடப்படுவதாக வவுனியா தெற்கு வலயக்கல்விப்பணிப்பாளர் மு. இராதாகிருஸ்ணன் தெரிவித்தார்

வவுனியா சாளம்பைக்குளத்தில் கொழும்பில் இருந்து வருகை தந்த தாயும் மகளும் கொரோனா தொற்றுக்குள்ளாகியமை தெரிய வந்துள்ள நிலையில் குறித்த பகுதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது

இந் நிலையிலேயே அப் பகுதியில் உள்ள பாடசாலையையும் மூட சுகாதாரபிரிவு உத்தரவிட்டுள்ளது

Be the first to comment

Leave a Reply