விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டு! 41 பேர் கைது

தனிமைப்படுத்தப்பட்ட விதிமுறைகளை மீறியதற்காக காவல்துறையினரால் நேற்று மாத்திரம் 41 பேர் கைது செய்யப்பட்டனர்.

முகக்கவசம் அணியாதது மற்றும் சரியான சமூக தூரத்தை பராமரிக்காமை காரணமாகவே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று காவல்துறை பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

இதேவேளை 2020 அக்டோபர் 30 முதல், தனிமைப்படுத்தப்பட்ட சட்ட மீறல்கள் தொடர்பாக மொத்தம் 1,390 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட அனைவருக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். தனிமைச் சட்டங்களை மீறுவோர் துரோகிகளாக கருதப்படுவர் என ஏற்கனவே அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

Be the first to comment

Leave a Reply