தம்புள்ள பொருளாதார மத்திய நிலையத்தில் நால்வருக்கு கொரோனா

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் இன்று நடத்தப்பட்ட பி சி ஆர் பரிசோதனையில் வர்த்தக நிலையங்களில் பணியாற்றிய நால்வருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பில் தம்புள்ளை நகர மேயர் ஜாலிய ஒபாதா தெரிவிக்கையில்

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் உள்ள மூன்று வர்த்தக நிலையங்களில் பணியாற்றும் நால்வருக்கு இன்றையதினம் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

கடந்த சில நாட்களாக குறித்த பொருளாதார மத்திய நிலையத்தில் நடத்தப்பட்ட பி சி ஆர் பரிசோதனையில் இதுவரை 12 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Be the first to comment

Leave a Reply