நல்லூர் பொதுச் சுகாதார உத்தியோகத்தர் பணிமனை; மருத்துவ மாதுவின் கணவனுக்கு கொரோனா!

நல்லூர் பொதுச் சுகாதார உத்தியோகத்தர் பணிமனை; மருத்துவ மாதுவின் கணவனுக்கு கொரோனா!

நல்லூர் பொதுச் சுகாதார உத்தியோகத்தர் பணிமனை; மருத்துவ மாதுவின் கணவனுக்கு கொரோனா!யாழ்ப்பாணம் நல்லூர் பொதுச் சுகாதார உத்தியோகத்தர் பணிமனையின் கீழ் கடமையாற்றும் மருத்துவ மாது (Midwife) ஒருவரின் கணவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக நம்பகரமாக தெரியவந்துள்ளது.

மருதனார்மடம் கொத்தணியில் நேற்று அடையாளம் காணப்பட்ட 26 பேரில் அவரும் ஒருவர் என்று சுகாதாரத் திணைக்கள வட்டாரங்கள் அருவிக்குத் தெரிவித்தன.

குறித்த மருத்துவமாது உட்பட்ட குடும்பத்தார் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

தொடர்ந்து மேற்கொள்ளப்படும் பிசிஆர் பரிசோதனையின் தொடராகவே அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது

Be the first to comment

Leave a Reply