இலங்கை ஜனாஸாக்களை புதைக்க மாலைதீவு தயார்- அலிசப்ரி இராஜினாமா

இலங்கை ஜனாஸாக்களை புதைக்க மாலைதீவு தயார்- அலிசப்ரி இராஜினாமா?

இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரழப்போரின் உடல்களை அடக்கம் செய்ய மாலைதீவு அரசாங்கம் சம்மதம் தெரிவித்திருப்பதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கை அரசாங்கம் விடுத்த வேண்டுகோளினை மாலைதீவு அரசாங்கம் ஏற்றுக்கொண்டு பதிலளித்திருப்பதாகவும் ஊடகமொன்று செய்தி வெளியிட்டிருக்கின்றது.

இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழக்கும் ஜனாஸாக்கள் எரிக்கப்படுவதால் முஸ்லிம் மக்களிடையே கடும் எதிர்ப்புக்கள் காணப்படுகின்றன.

இதனால் முஸ்லிம் மக்கள் பலரும் கொரோனா பரிசோதனையை நடத்த முன்வரவில்லை.

இதனிடையே ஏற்பட்டுள்ள அழுத்தங்கள் காரணமாக நீதியமைச்சர் அலிசப்ரி பதவியிலிருந்து விலகப்போவதாகவும் ஜனாதிபதியிடம் தெரிவித்திருந்ததாக கூறப்பட்டுள்ளது.

மேற்படி பிரச்சினைகளுக்கு தீர்வாக இலங்கை அரசாங்கம், மாலைதீவிடம் கோரிக்கை முன்வைத்திருந்த நிலையில் ஜனாஸாக்களை அடக்கம் செய்ய அந்நாட்டு அரசு சம்மதம் தெரிவித்திருப்பதாக தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன

Be the first to comment

Leave a Reply