இலங்கையில் மேலும் ஒருவர் மரணம்! 762 பேருக்கு கொரோனா!

இலங்கையில் மேலும் ஒருவர் மரணம்! 762 பேருக்கு கொரோனா!

இலங்கையில் கொரோனாத் தொற்றினால் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் கொழும்பு 13 பகுதியைச் சேர்ந்த 82 வயதுடைய பெண் என்றும் இதனால் கொரோனாத் தொற்றினால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 147 ஆக அதிகரித்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணத்தில் கல்முனை தேசிய மருத்துவமனையில் சம்மாந்துறையைச் சேர்ந்த 80 வயதுடைய நபர் உயிரிழந்தமை தொடர்பில் முற்பகல் தகவல் வெளியாகியிருந்தமை தெரிந்ததே.

இதேவேளை இலங்கையில் மேலும் 226 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர்கள் அனைவரும் பேலியகொடை கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் இன்றைய தினம் இதுவரையில் 762 கொவிட 19 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

இதற்கமைய, பேலியகொடை மற்றும் சிறைச்சாலை கொவிட் கொத்தணியில் இதுவரை பதிவான மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 27,747 ஆக அதிகரித்துள்ளது

Be the first to comment

Leave a Reply