தடை விதித்த அமெரிக்காவுக்கு சீனா பதிலடி

14 சீன அதிகாரிகளின் தடை விவகாரத்திற்கு சீனா அமெரிக்காவிற்கு பதில் வழங்கியுள்ளது.

இதன்பிரகாரம் ஹொங்கொங் மற்றும் சீனாவின் தெற்கு கடற்கரையில் உள்ள மக்காவ் ஆகிய இடங்களுக்கு வருகை தரும் அமெரிக்க இராஜதந்திர கடவுச்சீட்டுகளை வைத்திருப்பவர்களுக்கு அதன் விசா விலக்கினை சீன வெளியுறவு அமைச்சகம் இரத்துச் செய்துள்ளது.

ஹொங்கொங்கிற்கான தேசிய பாதுகாப்புச் சட்டத்தை ஏற்றுக்கொள்வதிலும், கடந்த மாதம் ஹொங்கொங்கில் தேர்ந்தெடுக்கப்பட்ட எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை பீஜிங் தகுதி நீக்கம் செய்வதிலும் 14 சீன அதிகாரிகளின் தொடர்பு காரணமாக அமெரிக்கா அவர்களுக்கு எதிராக பொருளாதாரத் தடைகளையும் பயணத் தடைகளையும் விதித்தது.

இதனையடுத்தே சீனா மேற்கண்ட தீர்மானத்தை எடுத்துள்ளதாக சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஹுவா சுனிங் பீஜிங்கில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் இதனை தெரிவித்துள்ளார்.

Be the first to comment

Leave a Reply