ஜனாதிபதி ஆணைக்குழுவில் குழப்பத்தை ஏற்படுத்திய வட்டிலப்பம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியமளிக்க அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையின் தலைவர் றிஸ்வி முப்தி நேற்று வருகை தந்திருந்தார்.

இதன்போது ஆணைக்குழு அறைக்குள் சந்தேகத்திற்கு இடமான பல பொதிகளை எடுத்துச் செல்வது பலராலும் பேசப்பட்டது.

இதனால் அங்கு சற்று குலப்பம் ஏற்பட்டுள்ளது.

ஊடகவியலாளர்கள் இது தொடர்பாக ஆணைக்குழு முன்னால் பணியிலிருந்த பொலிஸ் அதிகாரியிடம் வினவியபோது “குறித்த பொதிகள் பரிசோதிக்கப்பட்டதாகவும் அவற்றுள் வட்டிலப்பம் இருந்ததாகவும் எதற்காக எடுத்துச்செல்கின்றீர்கள் என வினவியபோது ஆணைக்குழு அதிகாரிகளுக்கு” என அவர்கள் தெரிவித்தனர்.

வேறு நாட்களிலும் ஆணைக்குழுவினுள் இருக்கும் அரச சட்டத்தரணிகளுக்கு உணவு வகைகளை எடுத்துச் செல்வதினால் இந்த பொதிகளையும் எடுத்துச் செல்வதற்கு ஆட்சேபனை தெரிவிக்கவில்லையென பொலிசார் தெரிவித்துள்ளனர்.

ஆணைக்குழுவில் பணிபுரியும் ஊழியர் ஒருவரும் வருகை தந்து அந்த பொதிகளை ஆணைக்குழுவினுள் எடுத்துச் செல்வதற்கு உதவியதை அவதானிக்க முடிந்தது.

எனினும் சற்று நேரத்திற்கு பின்னர் குறித்த பொதிகள் ஆணைக்குழு அறையிலிருந்து வெளியில் எடுத்து வரப்பட்டு ஜம்மியத்துல் உலமா சபை தலைவர் வருகை தந்த காரில் ஏற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

Be the first to comment

Leave a Reply