கல்முனையில் இரு வைத்தியர்களுக்கு கொரோனா!

Coronavirus 2019-nCov novel coronavirus concept background. Realistic Vector illustration EPS10

கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் கடமையாற்றும் இரு வைத்தியர்கள் உட்பட தாதியர் ஒருவரும் கொவிட் – 19 தொற்றுக்குள்ளாகியுள்ளதாக பணிப்பாளர் டாக்டர் ஏ.எல்.எப்.றஹ்மானும் உறுதிப்படுத்தியுள்ளார்.

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சம்மாந்துறையினை சேர்ந்த நபரொருவருக்கும் பொத்துவிலில் இருந்து சிகிச்சை பெற்ற நபரொருவரின் உறவினருக்கும் கொவிட் – 19 தொற்று ஏற்பட்டிருந்த நிலையில் குறித்த நபர்களுடன் தொடர்புகொண்டிருந்த எமது வைத்தியசாலையின் உத்தியோகத்தர்களுக்கு இன்று (12) அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது வைத்தியசாலையின் வைத்தியர்கள் இருவருக்கும் தாதியர் ஒருவருக்கும் தொற்று உறுதிசெய்யப்பட்டது.

இதனையடுத்து அவர்கள் பாலமுனை மற்றும் மருதமுனை ஆகிய வைத்தியசாலைகளில் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Be the first to comment

Leave a Reply