கொழும்பு மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 13 ஆயிரத்தை தாண்டியது

இலங்கையில் நேற்றைய தினம் கொரோனா தொற்றாளர் களாக அடையாளம் காணப்பட்ட 538 பேரில் 304 பேர் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என கொவிட்-19 தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரி வித்துள்ளது.

அதன்படி கடந்த ஒக்டோபர் மாதம் 4 ஆம் திகதியிலிருந்து தற்போது வரை கொழும்பு மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 13 ஆயிரத்து 961 ஆக உயர்ந்துள்ளது.

அதன் படி கொழும்பு மாவட்டத்தில் 304 பேர் , பொரளை பகுதியில் 254 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கம்பஹா மாவட்டத்தில் 28 பேர், கண்டி மாவட்டத்தில் 38 பேர், களுத்துறை மாவட்டத்தில் 27 பேர், இரத்தின புரி மாவட்டத்தில் 23 பேர் மற்றும் காலி மாவட்டத்தில் 14 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அம்பாறை மாவட்டத்தில் 11 பேர், குருணாகல் மாவட்டத் தில் 10 பேர், மாத்தளை மாவட்டத்தில் 06 பேர் மற்றும் மாத்தறை மாவட்டத்தில் 03 பேர் அடையாளம் காணப் பட்டுள்ளனர்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் 02 பேர், நுவரெலியா மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் தலா ஒருவர் என்ற அடிப் படையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், வெளிநாட்டிலிருந்து வருகை தந்த 69 பேர் உட்பட கொரோனா தொற்றாளர்களாக நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என கொவிட்-19 தடுப் பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

Be the first to comment

Leave a Reply