வரவு செலவுத் திட்டம் 2021 t.n.aயின் கபட நாடகம் அம்பலம்!!!!

கோத்தாவின் இனவாத பட்ஜெட்டும் கூட்டமைப்பின் இரட்டை நிலைப்பாடும்

கோத்தபாய அரசின் கன்னி பட்ஜெட் மீதான இறுதி வாக்கெடுப்பு நேற்று இடம் பெற்றது. எதிர்பார்த்ததைப் போலவே பட்ஜெட் பெரும்பான்மையுடன் நிறைவேறியது.

இந்த பட்ஜெட் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட போதே பாராளுமன்றிற்கு உள்ளேயும் வெளியேயும் தமிழ் தேசியக்கட்சிகளால் காரசாரமாக விமர்சிக்கப்பட்டது.

இவ்வகையில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கஜேந்திரன், சாணக்கியன், சுமந்திரன்,சிறிதரன், ஆகியோர் பட்ஜெட் மீதான விவாதத்தின் போது,பட்ஜெட்டை எதிர்த்து உரையாற்றிறிருந்தனர்.

இவற்றில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சாணக்கியன் ஆகியோரின் உரை அனைவரினது கவனத்தையும் ஈர்த்ததுடன், சிறுபான்மையினரின் பாராட்டையும் பெற்றிருந்தது.

குறிப்பாக கஜேந்திரகுமாரின் உரையை இனவாதிகள் குறுக்கீடு செய்து குழப்பிய போது சிறிதரன் தனது கட்சிக்கு வழங்கப்பட்ட நேரத்தில் 5 நிமிடங்களை வழங்கி அவரது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உரையை ஆற்றி முடிக்க உதவியமையை தமிழ் மக்கள் மகிழ்வுடன் வரவேற்ளனர்

கஜேந்திரகுமாரின் வருகையுடன் தமிழ் தேசிய அரசியல் சரியான திசை நோக்கி நகர ஆரம்பிப்பதாகவும்,தமிழ் மக்கள் மீதான அடக்குமுறைகளுக்கு எதிராக தமிழ் தேசியக் கட்சிகள் ஒற்றுமையாக குரலெழுப்பும் எனவும் மக்கள் நம்பினர்.

ஆனால் கூட்டமைப்பானது வரவு செலவு திட்ட இறுதி வாக்கெடுப்பில் தமது எதிர்ப்பை பதிவு செய்யாமல் வாக்கெடுப்பிலிருந்து விலகி இந்த நம்பிக்கையை தவிடு பொடியாக்கியிருந்தது

விக்னேஸ்வரனும் இவ்விடயத்தில் கூட்டமைப்பு டன் கை கோர்த்துக் கொண்டார்.

இதனையே கஜேந்திரகுமார் ஆரம்பத்தில் இருந்தே சொல்லி வருகிறார்,”கூட்டமைப்பு க்கும் விக்கினேஸ்வரனின் கட்சிக்கும் இடையே பெரிதாக வேறுபாடுகள் இல்லை இரண்டும் மோதகமும் கொழுக்கட்டை யும் போன்றவை” இவை எவ்வளவு தீர்க்கதரிசனமானவை என்பதை மக்கள் இப்போது புரிந்திருப்பர்

வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமை க்கு கூட்டமைப்பு கூறும் காரணம் எதிர்ப்பதால் எதுவித பயனும் இல்லை என்பதே.ஆனால் தமிழ் தேசியக்கட்கள் அனைத்தும் ஒருமித்து இந்த பட்ஜெட்டை எதிர்த்தன என்பது ஒரு வலுவான செய்தி. அடக்குமுறை அரசின் மீதான அதிருப்தியை ஒருமித்து சிறுபான்மை கட்சிகள் எதிர்ப்பது அரசுக்கு அழுத்தங்களை ஏற்படுத்துவதுடன் சர்வதேசத்தின் கவனத்தையும் ஈர்த்திருக்கும்.ஆனால் வாக்கெடுப்பிலிருந்து விலகியதால் சாணக்கியன் உட்பட கூட்டமைப்பு உறுப்பினர் அனைவரது உரையும் பயனற்று போயிற்று.
இவை அனைத்துக்கும் மேலாக ,பட்ஜெட் நிறைவேறியபின் சபாநாயகர் இல்லத்தில் நடைபெற்ற விருந்துபசாரத்தில் சம்பந்தர் கலந்து கொண்டமை தமிழ் மக்களை முகம் சுழிக்க வைத்துள்ளது. ஒரே ஒரு ஆறுதலான செய்தி கஜேந்திரகுமார், கஜேந்திரன் தமிழ் மக்கள் சார்பில் பட்ஜெட்டை எதிர்த்து வாக்களித்தமை.
இன்னும் எவ்வளவு காலம் தமிழ் மக்களை கூட்டமைப்பு ஏமாற்றும் என்பதோ அல்லது இன்னும் எவ்வளவு காலம் தமிழ் மக்கள் கூட்டமைப்பை நம்புவார்கள் என்பதோ கடவுளுக்கே வெளிச்சம்.

நன்றி வந்தியதேவன் வல்லவராயன்

Be the first to comment

Leave a Reply