வரவு – செலவுத்திட்ட பங்கு கொள்ளாத t.n.a விருந்தில் சம்பந்தன் பங்கேற்பு

வரவு – செலவுத்திட்ட விருந்தில் சம்பந்தன் பங்கேற்பு!

கோட்டாபய அரசின் 2021ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் நேற்று மாலை நிறைவேற்றப்பட்ட பின்னர், சம்பிரதாய ‘வரவு – செலவுத்திட்ட தேனீர் விருந்து’ சபாநாயகர் இல்லத்தில் நடைபெற்றது. இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும் பங்கேற்றார்.

வரவு – செலவுத் திட்டம் மீது நேற்று மாலை நடைபெற்ற இறுதி வாக்கெடுப்பில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் உட்பட அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் கலந்துகொள்ளவில்லை. ஆனால், அதன்பின்னர் சபாநாயகரின் இல்லத்தில் நடைபெற்ற ‘வரவு செலவுத்திட்ட’ விருந்தில் சம்பந்தன் பங்கேற்றார்.

‘வரவு – செலவுத்திட்ட’ விருந்துக்கு கூட்டமைப்புக்கும் அழைப்பு வந்தது. ஆனால், நாம் வாக்கெடுப்பில் பங்கேற்காத காரணத்தால் அதிலும் கலந்துகொள்ளவில்லை. தலைவர் சம்பந்தன் மட்டும் பங்கேற்றார். அது அவரின் தனிப்பட்ட விருப்பம் என்று கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தனர்

Be the first to comment

Leave a Reply