
வரவு – செலவுத்திட்டம் – கஜன்கள் மட்டுமே பங்கேற்று எதிர்ப்பு!
நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற கோட்டாபய அரசின் 2021ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் மீதான வாக்கெடுப்பில் வடக்கு, கிழக்கைச் சேர்ந்த தமிழ்த் தேசியக் கட்சிகளில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மாத்திரமே பங்கேற்றது.
அக்கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பொதுச்செயலாளர் செல்வராசா கஜேந்திரன் ஆகிய இரு நாடாளுமன்ற உறுப்பினர்களும் வாக்கெடுப்பில் பங்கேற்று வரவு – செலவுத் திட்டத்தை எதிர்த்தனர்.
வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பின்போதும் மேற்படி இருவரும் எதிர்த்து வாக்களித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
Be the first to comment