இலங்கை தொடர்பில் இந்தியா வெளியிட்டுள்ள நம்பிக்கை!

இலங்கையுடனான அபிவிருத்திக்கான ஒத்துழைப்பு சிறப்பான முறையில் சென்று கொண்டிருப்பதாக இந்தியா தெரிவித்திருக்கிறது.

இந்தியாவின் துணை உயர்ஸ்தானிகர் வினோத் கே ஜேக்கப் கடந்த 7ஆம் மற்றும் 8 ஆம் திகதிகளில் மன்னார் மற்றும் யாழ்ப்பாணத்திற்கு விஜயத்தை மேற்கொண்டிருந்தார். இதன்போது அவர் மன்னார் மடு தேவாலயத்தில் யாத்திரிகளுக்காக அமைக்கப்படவுள்ள 144 தங்கும் இடங்கள் தொடர்பில் ஆய்வுகளை மேற்கொண்டார்.

இதற்கான ஒப்பந்தம் 2020 ஆகஸ்ட் மாதத்தில் கையெழுத்தாகி இருக்கிறது. இந்தநிலையில் 2021 செப்டம்பர் மாதத்திற்குள் சுமார் 290 மில்லியன் ரூபா செலவில் இந்த திட்டத்தை நிறைவு செய்ய எதிர்பார்க்கப்படுவதாக இந்திய துணை உயர்ஸ்தானிகர் இதன்போது குறிப்பிட்டிருக்கிறார்.

அதேநேரம் மன்னார் திருக்கேதீஸ்வரம் கோவிலில் மகாமண்டபம் மற்றும் ஏனைய பணிகளை 320 மில்லியன் ரூபா செலவில் செய்து முடிக்க இந்தியா தீர்மானித்திருப்பதாகவும் துணை உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டார்.

தமது பயணத்தின் ஒரு கட்டமாக மன்னாரில் அமைக்கப்பட்ட காற்றாலை மின் திட்டத்தின் ஆரம்ப வைபவத்தில் இந்தியாவின் துணை உயர்ஸ்தானிகர் பங்கேற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Be the first to comment

Leave a Reply