கொரோனாவினால் உயிரிழந்த குழந்தையின் உடலை பொறுப்பேற்க பெற்றோர் மறுப்பு

கொரோனா வைரசினால் உயிரிழந்த 20 நாள் குழந்தையின் பெற்றோர் குழந்தையின் உடலை பொறுப்பேற்க மறுத்துள்ளனர்.
பிசிஆர் சோதனை குறித்து தங்களிற்கு கரிசனைகள் உள்ளதாக அவர்கள் கொழும்பு கசட்டிற்கு தெரிவித்துள்ளனர்.

தங்களது மத நம்பிக்கையின் அடிப்படையில் குழந்தையின் உடலை அடக்கம் செய்யுமாறு தாங்கள் வேண்டுகோள் விடுத்ததாகவும் எனினும் அதனை அதிகாரிகள் ஏற்றுக்கொள்ளவில்லை எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக குழந்தையின் உடலை பொறுப்பேற்க மறுத்துவிட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Be the first to comment

Leave a Reply