
பிரித்தானியாவை தொடர்ந்து Pfizer-BioNTechCOVID – 19 தடுப்பூசியை வழங்குவதற்கு கனடா அனுமதி வழங்கியுள்ளது.
Pfizer-BioNTech COVID – 19 தடுப்பூசி பிரித்தானியாவில் வழங்கப்பட்டதை தொடர்ந்து கனடாவும் அனுமதி வழங்கியுள்ளது.
249,000 தடுப்பு மருந்துகள் தேவையாகவுள்ளதாக கனேடிய பிரதமர் Justin Trudeau தெரிவித்துள்ள நிலையில், 20 மில்லியன் தடுப்பு மருந்துகள் தற்போது கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் இது ஒரு மைல் கல் என கனடா குறிப்பிட்டுள்ளது.
தடுப்பு மருந்தானது தரமானதுடன் பாதுகாப்பானது என தடுப்பு மருந்து கொள்வனவு முகவர் நிலையம் தெரிவித்துள்ளது.
இதனிடையே அவசர தேவைகளுக்காக பஹ்ரைனும் குறித்த தடுப்பு மருந்துக்கு அனுமதி வழங்கியுள்ளது.
Pfizer/BioNTech COVID – 19 தடுப்பூசியை உலகின் முதலாவது நபராக பிரித்தானியாவின் 90 வயதான பெண் பெற்றுக்கொண்டார்.
8 இலட்சம் Pfizer/BioNTech COVID – 19 தடுப்பூசி தொகுதியில் முதலாவது தடுப்பூசியை அவர் பெற்றுக்கொண்டுள்ளார்.
இந்த மாத இறுதியில் மேலும் 4 மில்லியன் மக்கள் தடுப்பூசியை பெற்றுக்கொள்வர் என கூறப்படுகின்றது.
பிரித்தானிய வரலாற்றிலேயே தடுப்பு மருந்து வழங்கும் மிகப்பாரிய திட்டம் இதுவென தேசிய சுகாதார சேவைகளின் இங்கிலாந்துக்கான நிறைவேற்று அதிகாரி சேர் சைமன் ஸ்டீவென்ஸ் குறிப்பிட்டார்.
Be the first to comment